முருகனடியார்கள்

0

 முருகனடியார்கள்

நக்கீரர்:

  • மதுரை கணக்காயனார் மகன்.
  • இவர் இயற்றிய நூல் – திருமுருகாற்றுப்படை கடைச்சங்க பத்துப்பாட்டின் முதல் நூல்.
  • முருகனருளால் பூதத்தின் இடர் நீங்கி இன்புற்றார்.

அருணகிரிநாதர்:

  • இயற்றியவை – கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி, திருவகுப்பு ஆகியன.
  • சிவன், சக்தி, விஷ்ணு அனைவரையும் முருகனோடு இணைத்துப் புகழந்தார்.
  • அருணை கோபுரத்தில் தங்கியிருந்து 36 ஆயிரமாவது திருப்புகழ் பாடும்போது முருகன் காட்சியளித்தாராம்.
  • மயில் விருத்தம், வேல்விருத்தம் பாடினார்.
  • ‘வாக்கிற்கு அருணகிரி” எனப் பெயர் பெற்றார்.

குமரகுருபரர்:

  • பாண்டிய நாட்டில் ஸ்ரீவைகுண்டமருகில் கைலாசபுரத்தில் கவிராயர் சிவகாமசுந்தரியின் மகன்.
  • முதல் 5 ஆண்டுகளாக ஊமையாக இருந்தார்.
  • செந்திலாண்டவரால் பேச்சுதிறன் பெற்று ‘கந்தர் கலி வெண்பா” பாடினார்.
  • இவர் இயற்றியவை – கயிலை கலம்பகம், மீனாட்சிப்பிள்ளைத் தமிழ், மதுரைக் கலம்பகம்,  முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் ஆகியன.
  • இவரது ஞானசாரியர் – தரும ஆதீன மாசிலாமணி தேசிக சுவாமிகள்.
  • இவர் காசியில் மடங்கட்டி தொண்டாற்றினார்.
  • காசியில் வைகாசி கிருஷ்ணபட்ச திதியில் இறைவனடி சேர்ந்தார்.

சைவம்:

  • மூலகாமங்கள் 28. உபாகங்கள் 20 போன்ற வரையறைகள் 11ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு  பின்பே தமிழகத்தில் பரவின.
  • திரிலோனசிவாசாரியர் இயற்றிய வடநூல் – சித்தாந்தசாராவளி.
  • இதில் வடநூல் ஆகமங்களின் நாற்பாத பொருள்களை சுருக்கமாகவும், வரிசைப்படுத்தியும் கூறுகிறது. அதன் கிரியாபாதத்தின் இறுதியில் சைவாசாரியார் வரலாறு கூறப்படுகிறது.
  • சித்தாந்த சாராவளியின் உரையாசிரியராகிய அநந்த சிவாச்சாரியார் ‘இங்கு பூர்வகதை” என்ற வரலாற்று குறிப்பை தருகின்றார்.
  • அதன்படி கோதாவரி கரையில் மந்திரகாளி என்ற பட்டணம் உண்டு. அங்கு மந்திர காளீசுவரைச் சூழ ஆமர்த்தகம், புட்பகிரி, கோளகி, இரணபத்ரம் என நான்கு சைவ மடங்கள் இருந்தன.
  • அங்கிருந்த சைவாச்சாரியரை இராஜேந்திரசோழன் காஞ்சி மற்றும் சோழ மண்டலத்திலும் ஸ்தாபித்தான்.
  • மன்னன் முதலாம் இராஜேந்திரன் ‘கங்கைகொண்ட சோழன்” என புகழப்பட்டான்.
  • இந்நிகழ்ச்சி நடந்தது கி.பி.23 ஆகும். இவற்றை கல்வெட்டு சான்றுகளோடு கலந்து நோக்குபவர் – டி.வி. சதாசிவபண்டாரத்தார்.
  • நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலத்தை என்பவை வேதம், அங்கம், புராணம், உபபுராணம், ஸ்மிருதி என்பனவற்றின் பெயர்களையும், தொகைகளையும் கூறுவன. ஆனால் ஆகமங்களை பற்றி இவ்வாறு எடுத்து கூறுவதில்லை.
  • ஸ்ரீகண்டாச்சாரியார் என அழைக்கப்படுபவர் – நீலகண்ட ஆசாரியார்.
  • நீலகண்டச்சாரியார் – பிரஹ்மசூத்திரங்களுக்கு முறைப்படி பாஷ்யம் செய்துள்ளார்.
  • சிவசாரூபம் பெற்ற பதமுத்தர்களில் அவதாரம் எனக் கூறப்படும் யோகாசாரியார்களுள் முக்கியமானவர் – சுவேதாசாரியார்.
  • சுவேதாசாரியார், நீலகண்டசாரியாரின் ஆசிரியர் என்பது ஸ்ரீகண்டாஷியத்தால் விளங்குகிறது.
  • வருணபத்ததி, சைவாகம ஞானம் பெற்ற தலையாய சைவாசாரியார்கள் – 1)ஸ்ரீதுருவாசர் 2)பைங்கலாச்சாரியார் 3)உத்திரச்சோதி 4)சத்தியசோதி
    5)ஸ்ரீகண்டர்(நீலகண்டர்) 6)ஸ்ரீவிஷ்ணுகண்டர் 7)வித்யாகண்டர் 8)ராமகண்டர்
  • இவர்கள் அனைவரையும் ‘தேசிகோத்தமர்கள்” என அழைக்கின்றனர்.
  • வாகீச முனிவர் 12ம் நூற்றாண்டின் இறுதியில் திருவொற்றியூரில் சதுரான பண்டிதர் மடத்தில் தங்கியிருந்து, சோமசம்பு பத்ததி, ஆளுடையநம்பி ஸ்ரீபுராணம் முதலியவற்றை பொதுமக்களுக்கு சொற்பொழிவாற்றினார்.
  • வாகீசமுனிவர் எழுதிய நூல் – ஞானமிருதம் (அகவற்பாக்களால் ஆனது)

சிவநெறிக்கும்ஆழ்வார் நெறிக்கும் உள்ள வேறுபாடு:

  • 1)சிவநெறியில் முதற்கடவுளுக்கு பிறப்பு இல்லை. அவதாரம் கூறப்படுவதில்லை. ஆனால் ஆழ்வார் நெறியில் கடவுளுக்கு 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன.
  • 2)பரமுத்தி நிலையில் உயிர்க்கோ, கடவுளுக்கோ உடம்பு உண்டு என்ற கொள்கை சைவத்தில் கிடையாது. வைணவத்தில் பரமுத்தி நிலையில் கடவுளுக்கும் உயிர்களுக்கும் திவ்விய சரீரம் உள்ளது.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!