சைவ அகப்புறச் சமயங்கள்

0

சைவ அகப்புறச் சமயங்கள்

 • சிவபெருமானை ஆன்மாவானது அடைய பரிசுத்த அறிவு, அருள் ஆகியவற்றைக் கொண்டு பேரின்பத்தை தரும் மதம் – சைவ மதமாகும்.
 • உட்பிரிவுகள் பல. முக்கியமானது – சித்தாந்த சைவம்.
 • முப்பொருள் உண்மைகள் – பதி, பசு, பாசம். பதி – கடவுள் (அ) சிவம். இவருக்கும் ருத்ரன், பிரம்மா, விஷ்ணுவுக்கும் வேறுபாடு உண்டு.
 • மூவருக்கும் முழுமுதல் கடவுள் சிவனே. கடவுளை சகுணர் (அ) நிர்குணர் எனக் கூறுவர்.
 • அகளம் — நிர்க்குணம். குறியும், குணமும், தொழிலும், உருவமும் இல்லாமல் எல்லாவற்றிற்கும் புறம்பாக நிற்பதை அகளர் எனக் கூறுவர்.
 • அகளமாய் நின்ற அறிவரும் அப்பொருளே சகுணமாகும்போது எட்டு
  குணங்களுடையதாய் ஐந்தொழில் இயற்றுகின்றது.
 • முதல்வனை ‘எண்குணத்தான்” எனக்கூறும் நூல் – திருக்குறள்.
 • தூய அறுகுணன்(சுத்த ஷாட்குண்ணியன்) என அழைக்கப்படுபவன் – முதல்வன்.
 • ‘நிர்குணன்” என அழைக்கப்படுபவன் – முதல்வன்

 எண் வகை குணங்கள் :

 1. தன்வயத்தானாதல் ———– சுவதந்திரதை
 2. தூய உடம்பினனாதல்——— விசுத்ததேகம்
 3. இயற்கை உணர்வினனாதல் – அநாதிபோதம்
 4. முற்றும் உணர்தல் ————– சர்வஞ்ஞதை
 5. இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல் – அநாதிமுத்தத்துவம்
 6. பேரருள் உடைமை ————–அலுப்த சக்தி
 7. முடிவில் ஆற்றலுடைமை
 8. வரம்பிலின்பமுடைமை.
 • அநாதி முத்தத்துவத்தின் வேறுபொருள் – நிராமயம் (பிணியின்மை), நித்தியதிருப்தி.
 • ‘ஏவர்தம் பாலும் இன்றி எல்லை தீர் அமலற்குள்ள மூவிருகுணணும் சேய்க்கு முகங்களாய் உற்ற தென்ன” – கந்தபுராணம்
 • இறைவன் செய்யும் தொழில்கள் ஐந்து வகைப்படும். அவை – சிருஷ்டி – படைத்தல்: சம்ஹாரம் – அழித்தல்: ஸ்திதி – காத்தல் : த்ரோபவம் – மறைத்தல்: அனுக்கிரகம் – அருளல்.
 • ‘பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” – திருவாசகம்(மாணிக்கவாசகர்)
 • “சேர்வார் தாமே தானாகச் செய்யும் அவன்” – ஆளுடையபிள்ளை என
  அழைக்கப்படும் திருஞானசம்பந்தர் எழுதிய திருப்பாட்டு.
 • ‘படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடி” – திருவாசகம்.
 • ‘மூன்று மூர்த்தியுள் நின்றிய லுந்தொழில் – மூன்றும் ஆயின மூவிலை சூழத்தான்” – திருநாவுக்கரசர்.
 • ‘இரண்டும் ஆமவர்க்கு உள்ளன செய்தொழில்” – திருநாவுக்கரசர்.
  • ‘பந்தம் வீடு தரு பரமன்” – பெரியபுராணம்.
 • முதல்வனை ‘விச்சுவாதிகன், விச்சுவகாரணன், விச்சுவரூபி, விச்சுவாந்தரியாமி” என அழைப்பது — வேதங்கள்.
 • விச்சுவம் என்பதற்கு உலகம் என்று பொருள்.
 • இத்தொழில்புரிய இச்சை, கிரியை, ஞானம் ஆகிய சக்திகள் உதவி புரிகின்றன.
 • ‘ஸத்காரியம்’ என்பது – ‘உள்ளது போகாது : இல்லாது வாராது” .
 • சைவ சமய அளவைகள் 6. அவை காண்டல், கருதல், உரை, ஒப்பு, பொருள், சுபாவம்.
 • சைவ சமயம் கூறும் இறைவனின் இரு பெருநிலை – சொரூபநிலை,  தடத்தநிலை.
 • சைவ சமயம் இறைவனை சச்சிதானந்தம் என்கிறது.

சைவசமய கிளைகள்:

அகப்புறச்சமயங்கள் மொத்தம் 6. அவைகளாவன: 
1.பாசுபதம் – ஆன்மா இல்லை. இன்பதுன்பம் வெறுப்பு, தோன்றுகையில்
ஆன்மா இறையருளைப் பெறுகிறது.
2.மாவிரதம் – ஆன்மா பந்தமுற்று இன்பதுன்பத்தை அனுபவிக்கும். எலும்புமாலை
அணிந்து சரியை தொண்டு செய்தால் முக்தி கிட்டும்.
3. கபாலம் – தலையோட்டில் ஐயம் ஏற்று உண்டு பச்சை கொடி ஏந்தி சிவனை
வழிபட்டால் உயிர் இறைவனிடம் கலக்கும்.
4. வாமம் – சக்தியை வழிபட்டு அதில் லயிப்பதே முக்தியை இயம்பும்.
5. வயிரவம் – வைரவக் கடவுளை சாருவதே முக்தி.
6. ஐக்கிய வாதம் – ஆணவ மலமில்லை. பாவ, புண்ணியம் நீக்கின் மாய, கன்மங்கள் அழியும்.

சைவ அகச்சமயங்கள் 6. அவையாவன: 
• 1.பாடாணவாதம் – முக்தியிலும் ஆன்மா நீங்காது. கல்போல் கிடப்பதே முக்தி. ஆன்மா இறையிடம் கூடுவதில்லை.
• 2. பேதவாதம் – ஆன்மா மூன்று மலம் நீங்கபெறின் பெறுவானும், பேறுமாய் நிற்கும் அதுவே முக்தி.
• 3.சிவசமயவாதம் – உயிர் நீங்கப் பெறின் இறைவனின் எண்குணம் பெற்று, முதல்வனோடு அத்துவிதமாகும்.
• 4.சிவசங்கிரானந்தவாதம் – உப்பிலிட்டவை உப்பாவது போல ஆன்மா சிவமேயாகி, சிவகரணம் பெறும்.
• 5.ஈஸ்வர அவிகார வாதம் – குடத்தில் ஏற்றிய விளக்கு போல ஆன்மா உடம்பில்
பிரகாசிக்கும். அது மலபரிபாகம், சந்நிதிபாதம், தேர்ந்த போது இறைவனடி அடையும்.
• 6. சிவாத்துவித சைவம் – பசு, பதி, பாசம் சித்தாந்த சைவத்தோடு ஒப்பக்கூறி மரத்தின் கொம்புகளும் மரமாவது போல அனைத்து ஸத்தே எனவும், ஆன்மாவிடமிருந்து அறியும் ஸத்து சிவமே எனவும் கூறும்.

சைவத்தை அறுவகையாக பகுத்து கூறுவதும் உண்டு. அவையாவன: 

பெயர்  வழிபடப்படும் கடவுள்
காணாபத்தியம் கணபதி
கௌமாரம் முருகன்
ஸெளரம் சூரியன்
வைணவம்  விஷ்ணு
சாக்தேயம் சக்தி
சைவம் சிவன்
 • “ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள்” — திருமூலர்.
 • “அறுவகை சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்” – சிவஞானசித்தியார்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!