TNPSC தேர்வில் முழு மார்க் வேண்டுமா? உங்களுக்கான முக்கியமான கேள்வி பதில் இதோ!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பொதுத்தமிழ் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
1. கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.
(A) வந்து தந்தான்
(B) தைத்த சட்டை
(C) தங்கை கேட்டாள்
(D) சென்று பார்த்தான்
விடை : (B)
2. குழல் கேட்டு மகிழ்ந்தான் இது – எவ்வகை ஆகுபெயர்?
(A) காரியவாகுபெயர்
(B) கருவியாகுபெயர்
(C) கருத்தாகுபெயர்
(D) தானியாகுபெயர்
விடை : (B)
ரூ. 640 கோடி மதிப்பில் கண்ணாடி உற்பத்தி ஆலை – பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ்!
3. பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
(A) கொளல் வினா
(B) அறியா வினா
(C) ஐய வினா
(D) ஏவல் வினா
விடை : (A)
4. “செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
(A) திருமந்திரம்
(B) ஏலாதி
(C) திருவள்ளுவமாலை
(D) தேவாரம்
விடை : (C)
5. தீரா இடும்பை தருவது எது?
(A) ஆராயாமை, ஐயப்படுதல்
(B) குணம். குற்றம்
(C) பெருமை, சிறுமை
(D) நாடாமை.பேணாமை
விடை : (A)



























