ரூ. 640 கோடி மதிப்பில் கண்ணாடி உற்பத்தி ஆலை – பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ்!

0

ரூ. 640 கோடி மதிப்பில் கண்ணாடி உற்பத்தி ஆலை – பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.

இந்த திட்டத்தில் இவ்ளோ லாபமா? ஆச்சர்யமூட்டும் திட்டம் இதோ!

உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ. 640 கோடி மதிப்பில் அமைக்க உள்ளது பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம். நவீன முறையில் முன்-கவர் கண்ணாடிகளை தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், மொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!