TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!

0

TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் பொதுத் தமிழ் பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?

(A) அப்துல் காதர்

(B) உமறுப்புலவர்

(C) அகமது மரைக்காயர்

(D) அபூபக்கர்

விடை : (B)

2. பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?

(A) சுந்தர் சுவாமிகள்

(B) சுந்தராச்சாரியார்

(C) சுசீந்திர முனிவர்

(D) பெருமாள் பிள்ளை

விடை : (A)

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!

3. “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று முழக்கமிட்டவர்

(A) சி. சுப்பிரமணிய பாரதியார்

(B) பாரதிதாசனார்

(C) உ.வே.சா. ஐயர்

(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

விடை : (A)

4. ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?

(A) ஈ.வே.இரா.

(B) உ.வே.சா

(C) உடுமலை நாராயணகவி

(D) மு.வ

விடை : (C)

5. ‘மக்கள் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்?

(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

(B) அழ.வள்ளியப்பா

(C) பாரதிதாசன்

(D) பாரதியார்

விடை : (A)

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!