TNPSC தேர்வில் பாஸ் ஆகணுமா? இது உங்களுக்கு யூஸ் ஆகும்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Geography பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1) எதிரி இராணுவங்களின் நடமாட்டம் மற்றும் அணுசக்தி நிலையங்களின் அமைவிடங்களைக் கண்டறிந்து தகவல் கொடுக்கும் செயற்கைக்கோள்,
(A) வள செயற்கைக்கோள்
(B) உளவு செயற்கைக்கோள்
(C) சூரியனைச் சார்ந்த செயற்கைக்கோள்
(D) புவிநிலை செயற்கைக்கோள்
விடை – B
2) கோமதி எந்த ஆற்றின் துணையாறு?
(A) யமுனை
(B) கங்கை
(C) பிரம்மபுத்திரா
(D) சட்லஜ்
3) சூரிய மண்டலத்தின் ‘நீல கிரகம்’ என அழைக்கப்படுவது எது?
(A) பூமி
(B) செவ்வாய்
(C) வியாழன்
(D) சனி
விடை – A
4) உலகின் மிகப்பெரிய தீவு எது?
(A) கிரீன்லாந்து
(B) மடகாஸ்கர்
(C) சுமதரா
(D) கிரேட் பிரிட்டன்
விடை – A
5) கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல?
(A) 800
(C) 2000
(B) 1200
(D) 2100
விடை – D
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
6) இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?
(A) மேற்கு வங்காளம்
(B) ஜார்காண்ட்
(C) கர்நாடகம்
(D) தமிழ்நாடு
விடை – C
7) அதிக அளவு கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ள மாநிலம் எது?
(A) குஜராத்
(B) மேற்கு வங்காளம்
(C) கேரளா
(D) ஒரிசா
விடை – B
8) கங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம்
(A) பறவைப் பாத டெல்டா
(B) விசிறி வடிவ டெல்டா
(C) பொங்குமுக டெல்டா
(D) முனை முறிவு டெல்டா
விடை – B
9) இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?
(A) அரிசி
(B) கோதுமை
(C) சோளம்
(D) கேழ்வரகு
விடை – B
10) தென்இந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படுவது எது?
(A) காவிரி ஆறு
(C) கோதாவரி
(B) வைகை ஆறு
(D) தாமிரபரணி
விடை – A



























