TNPSC குரூப் 2 Mains தேர்வு முடிவுகள் எப்போது…? TNPSC அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், சீனியர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த வருடம் குரூப் 2 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
மீண்டும் கூடுகிறது பாதுகாப்பு விவகார அமைச்சரவை.. எல்லை பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்..!!
மேலும், இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு 08.02.2025 முதல் 23.02.2025 வரை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இதன் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் தேர்வர்களை குஷிப்படுத்தும் விதமாக TNPSC அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, TNPSC குரூப் 2 Mains தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் வெளியாகும் என்று TNPSC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



























