TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு –  கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அதிக மார்க் பெற இது முக்கியம்!

0

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு –  கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அதிக மார்க் பெற இது முக்கியம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1) ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 50,000. அவர்களில் 40% ஆண்கள், 35% பெண்கள், மீதம் உள்ள குழந்தைகள், எனில் அந்த கிராமத்தில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க

(A) 12,000

(B) 12,500

(C) 17,500

(D) 13,500

விடை – B

2) ஒருவர், தனது வருமானத்தில் இருந்து 6 சதவீதமான ரூ. 3,000-ஐ சேமிப்பு செய்கிறார் எனில் அவரது வருமானம் எவ்வளவு?

(A) 40,000

(B) 50,000

(C) 45,000

(D) 43,000

விடை – B

3) ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?

(A) 16 2/3%

(C) 20%

(B) 15%

(D) 16%

விடை – A

4) A-ன் உயரமானது B-ன் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-ன் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

(A) 50%

(B) 45%

(C) 22 1/3%

(D) 33 1/3%

விடை – D

5) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

(A) 10 நாட்கள்

(B) 12 நாட்கள்

(C) 11 நாட்கள்

(D) 20 நாட்கள்

விடை – B

TNPSC தேர்வில் பாஸ் ஆகணுமா? இது உங்களுக்கு யூஸ் ஆகும்!

6) ஒரு தொகையின் தனிவட்டி 3 ஆண்டுகளுக்கு ரூ.235.20 மேலும் வட்டி வீதம் 14% எனில் அத்தொகையின் மதிப்பு என்பது

(A) ரூ. 480

(B) ரூ. 560

(C) ரூ. 650

(D) ரூ. 720

விடை – B

7) ஒருவர் ₹ 10,000 ஐ ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?

(A) 12,500

(B) 11,800

(C) 12,700

(D) 12,000

விடை – C

8) ₹1,000க்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி

(A) ₹ 1,000

(B) ₹ 200

(C) ₹100

(D) ₹2,000

விடை – B

9) ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

(A) ரூ. 400

(B) ரூ. 314

(C) ரூ. 326

(D) ரூ. 360

விடை – D

10) ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தை காண்க.

(A) 15%

(B) 20%

(C) 10%

(D) 25%

விடை – B

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!