TNPSC தேர்வில் கணித பாடத்தில் பாஸ் ஆகணுமா? அதிக மார்க் பெற இது முக்கியம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த போட்டி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து பாடங்களிலும் தனி கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
(A) 10 செ.மீ
(B) 15 செ.மீ
(C) 20 செ.மீ
(D) 30 செ.மீ
விடை : (C)
2. ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
(A) 5,35
(B) 6,42
(C) 9,63
(D) 10,70
விடை : (D)
TNPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது உங்கள் கனவா? இதை மிஸ் பண்ணாம பாருங்க!
3. A-க்கு B-ஐ போல் 2 மடங்கும் B-க்கு C-ஐப் போல் 2 மடங்கும் கிடைக்கும்படி ரூ. 700 ஐ.பிரித்தால் அவர்கள் பெறும் தொகை எவ்வளவு?
(A) ரூ.100, ரூ.200, ரூ.400
(B) ரூ. 200, ரூ. 300, ரூ. 200
(C) ரூ. 300, ரூ. 200, ரூ. 200
(D) ரூ. 400, ரூ. 200, ரூ. 100
விடை : (D)
4. ஒரு கூம்பு, அரை கோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.
(A) 2:3:4
(B) 1:2:3
(C) 2:1:3
(D) 3:2:5
விடை : (B)
5. ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும் தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
(A) 1 1/2 மணி நேரம்
(B) இரண்டு மணி நேரம்
(C) ஒரு மணி நேரம்
(D) 2 1/2 மணி நேரம்
விடை : (C)


























