TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு 2024 – விடைக்குறிப்பு வெளியீடு!

0
TNPSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு 2024 - விடைக்குறிப்பு வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Hostel Superintendent Cum Physical Training Officer பணிக்கென நடைபெற்ற எழுத்துத் தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC விடைக்குறிப்பு 2024:

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துணை சேவைகள் துறையில் Hostel Superintendent Cum Physical Training Officer பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 18.10.2023 அன்று TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான எழுத்து தேர்வானது 21.01.2024 அன்று கணினி வழித்தேர்வு முறையில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பானது இன்று (31.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இவ்விடைக்குறிப்பை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் எளிதாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விடைக்குறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் மறுப்பு இருப்பின் அதனை தெரிவிக்க 07.02.2024 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மறுப்பு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!