
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Section 2 Part B – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
பிரிவு B – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்.
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு B – 1. பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்.
“பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்” என்னும் தலைப்பு பொதுவாக, இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது . அதில், ஒன்று ‘தமிழ் சொற்களுக்கு நிகரான பொருள் தருதல்’, மற்றொன்று ‘தமிழ் செய்யுள்களில் ஆசிரியர்கள் குறிப்பிட்ட சொற்களுக்கு நிகரான பொருள் தருதல்’ ஆகும். இவ்வாறு, இந்த இரண்டு வகையாகவும் கேட்கப்படும் சில முக்கிய கேள்விகளை, உங்களுக்காக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “ஆரவாரம்”
A . சூரியன்
B . மலை
C . தொகுதி
D . பேரொலி
2. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “ஈதல்”
A . வருடம்
B . வருத்தம்
C . கொடுத்தல்
D . பூச்சி
3. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “உறுகண்”
A . இன்பம்
B . துன்பம்
C . உறுப்பு
D . பேரழிவு
4. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “எல்”
A . பகல்
B . இரவு
C . தானியம்
D . மேகம்
5. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “கமுகு”
A . தீபம்
B . மை
C . பாக்கு
D . வண்டு
6. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “கோன்”
A . அரசன்
B . வீடு
C . சிறுமை
D . பயன்
7. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “தனு”
A . மான்
B . வில்
C . விதை
D . தம்பி
8. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “நசி”
A . முத்து
B . வயிறு
C . நள்ளிரவு
D . பகல்
9. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “செறு”
A . வயல்
B . வளம்
C . மலை
D . மலர்
10. பொருத்தமான பொருளை தேர்வு செய்க: “மரை”
A . நிலவு
B . தாமரை
C . வானம்
D . பவளம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான பதிலை தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.

























