“ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர என்னால் முடியும்”.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு ..!!
நேட்டோ அமைப்பில் உக்ரைனை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள கூடாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அறிவுறுத்தியது. ஆனால், ரஷ்யாவின் கோரிக்கைக் மறுக்கப்பட்டதால், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த போரானது தொடங்கி மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், முன்னதாக இரு நாடுகளும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தை சவாலானதாக இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் ஈடுபாட்டுக்கு பிறகு எளிதானது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து இந்திய பிரதமர் மோடி முக்கிய கருத்தினை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…சற்று முன் வெளியான முக்கிய தகவல்
அதாவது, அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடிக்கும் இடையே நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் அமர்ந்து இது போருக்கான நேரம் கிடையாது என்று என்னால் பேச முடியும். அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனை நாடுகள் ஆதரவு அளித்தாலும் போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என்று நட்பு முறையில் தம்மால் எடுத்துக்கூற முடியும் என்று மோடி கூறியுள்ளார்.


























