TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Part B – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
பிரிவு B – பொருந்தாத சொல்லை கண்டறிதல், ஒரு பொருட் பன்மொழி , அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு B – 1.பொருந்தாத சொல்லை கண்டறிதல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பொருந்தாத சொல்லை மட்டும் கண்டறிய வேண்டும். எடுத்துகாட்டாக, நல் வினை, தீவினை, உயர்திணை ஆகிய மூன்று சொற்களில் பொருந்தாது உயர்திணை ஆகும். ஏனென்றால், நல் வினை, தீவினை ஆகிய இரண்டும் வினைகளை குறிக்கும்.
- பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்.
- பாலாறு
- ஏரி
- கடல்
- ஆறு
2. பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்.
- இயல்
- இசை
- குறிஞ்சி
- நாடகம்
3. பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்
- வலி
- வீரம்
- கோழை
- மறம்
4. பொருந்தாத சொல்லை கண்டறிதல்.
- மொட்டு
- அரும்பு
- பூ
- முகை
5. பொருந்தாத சொல்லை கண்டறிதல்.
- இகம்
- புவனம்
- ஞாலம்
- மாமருதம்
பிரிவு B – 2. ஒரு பொருட் பன்மொழி
ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் அறிவது ‘ஒரு பொருட் பன்மொழி’ எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கடல் என்று சொல்லுக்கு சமுத்திரம், சகாரம், ஆழி, விரிநீர் மற்றும் பெருநீர் என பல பொருட்கள் உள்ளது. எனவே, இவற்றை உதாரணமாக கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க – ‘அழகு’
A . கோலம், சிங்காரம், வண்ணம்
B . வனப்பு, எழில், சுந்தரம், வடிவு
C . நிறம், இரக்கம், வாசனை
D . தென்றல், கதிர், பிரகாசம்
2. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க – ‘அகிம்சை’
A . மெய், வாய்மை, சத்தியம்
B . பண்பு, அறிவு, விவேகம்
C . விளக்கம், குருதி, இன்னல் செய்யாமை
D . துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
3. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க – ‘குழந்தை’
A . மகவு, சேய், சிசு, பிள்ளை
B . மருந்து, கோல், அறம்
C . தென்றல், விளக்கம், விளைவு
D . ஒளி, பிரகாசம், வெளிச்சம்
4. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க – ‘இரவு’
A . புலன், செயல்திறன், பகுதி
B . அறம், மகவு, கதிர்
C . இராத்திரி, கங்குல், நிசி
D . நிலம், சுடர், விளக்கம்
5. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க – ‘ஞானம்’
A. சிந்தனை, சிறப்பு, விவேகம்
B .அறிவு, ஆற்றல், புத்தி, வித்தை
C .அறிவுரை, மெய், நிதானம்
D . கொள்கை, உணர்வு
பிரிவு B – 3. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
தமிழில் உயிரெழுத்துக்கள் – 12, மெய்யெழுத்துக்கள் – 18 மற்றும் உயிர் மெய்யெழுத்துக்கள் – 216 மற்றும் ஆய்த எழுத்து – 1 என மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. எனவே, அவை அமைந்திருக்கு எழுத்துக்களின் வரிசைப்படி சொற்களை எடுத்து எழுத வேண்டும்.
- கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகர வரிசை படுத்தி எழுதுக.
A . கதிரவன், சந்திரன், ஞாயிறு, திங்கள்
B . ஞாயிறு, திங்கள், சந்திரன், கதிரவன்
C . சந்திரன், திங்கள், ஞாயிறு, கதிரவன்
D . கதிரவன், ஞாயிறு, சந்திரன், திங்கள்
2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகர வரிசை படுத்தி எழுதுக.
A . குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
B . குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
C . நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை
D . குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்
3. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகர வரிசை படுத்தி எழுதுக.
A . சாலை, சட்டம், சிறப்பு, சீற்றம்
B . சீற்றம், சட்டம், சிறப்பு, சாலை
C . சட்டம், சாலை, சிறப்பு, சீற்றம்
D . சிறப்பு, சட்டம், சாலை, சீற்றம்
4. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகர வரிசை படுத்தி எழுதுக.
A . கடல், கடவுள், கடமை, கடன்
B . கடன், கடவுள், கடல், கடமை
C . கடமை, கடல், கடவுள், கடன்
D . கடமை, கடவுள், கடல், கடன்
5. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகர வரிசை படுத்தி எழுதுக.
A . வலம், சக்கரம், திக்கு, பிடி
B . சக்கரம், திக்கு, பிடி, வலம்
C . திக்கு, பிடி, வலம், சக்கரம்
D . பிடி, வலம், சக்கரம், திக்கு
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.


























