TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது.குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது மிகவும் முக்கியம்.இதற்கு தேர்வர்கள் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையவும்.
1. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
(A) ஆத்திச்சூடி
(B) கொன்றைவேந்தன்
(C) நல்வழி
(D) முதுரை
(E) விடை தெரியவில்லை
விடை : (D)
2. கேள்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
(A) கேட்டு
(B) கேட்ட
(C) கேட்டல்
(D) கேட்டான்
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
3. ‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
(A) தணி
(B) தணிந்த
(C) தணிந்து
(D) தனி
(E) விடை தெரியவில்லை
விடை : (A)
TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? இதை மறக்காம யூஸ் பண்ணிக்கோங்க!
4. ‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
(A) தந்த
(B) தரு
(C) தா
(E) விடை தெரியவில்லை
(D) தந்து
விடை : (C)
5. ‘சோ’- ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) அரசன்
(B) வறுமை
(C) மதில்
(D) நோய்
(E) விடை தெரியவில்லை
விடை : (C)



























