TNPSC குரூப் 4 தேர்வு – கணிதத்தில் இப்படியும் கேள்விகள் வரும்!
TNPSC தேர்வில் வெற்றி பெற்று சாதிக்கத் துடிக்கும் உங்களுக்கு உதவ எங்கள் வலைத்தளம் கடமைப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணிதத்தில் அளவைகள் பகுதியில், முப்பரிணாம கணக்குகளை இங்கே வழங்கியுள்ளோம். இதனை மீண்டும் மீண்டும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் சிறப்பாக செயலாற்றலாம்.
1) 66 செ.மீ.× 12 செ.மீ. எனும் அளவுக் கொண்ட ஒரு உலோகத் தகட்டினை 12 செ.மீ. உயரமுள்ள ஒரு உருளையாக மாற்றினால் கிடைக்கும் உருளையின் கன அளவு காண்க
(A) 2772 க.செ.மீ.
(C) 4185 க.செ.மீ.
(B) 5148 க.செ.மீ.
(D) 4158 க.செ.மீ.
விடை – D
2) களிமண்கொண்டு செய்யப்பட்ட 24 cm உயரமுள்ள ஒரு கூம்பை ஒரு குழந்தை அதே ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றுகிறது எனில் உருளையின் உயரம் காண்க.
(A) 42 செ.மீ
(C) 8 செ.மீ
(B) 48 செ.மீ
(D) 21 செ.மீ
விடை – C
3) 14 மீ விட்டம் மற்றும் 20 மீ ஆழமுள்ள ஒரு கிணறு உருளை வடிவில் வெட்டப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது தோண்டியெடுக்கப்பட்ட மண் சீராக பரப்பப்பட்டு 20 மீ x 14 மீ அளவுகளில் அடிப்பக்கமாகக் கொண்ட ஒரு மேடையாக அமைக்கப்பட்டால், அம்மேடையின் உயரம் காண்க
(A) 11 மீ
(C) 77 மீ
(B) 22 மீ
(D) 33 மீ
விடை – A
4) 5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச் சதுரத்தின் கன அளவு காண்
(A) 100 க.செ.மீ
(B) 110 க.செ.மீ
(C) 125 க.செ.மீ
(D) 105 க.செ.மீ
விடை – C
5) இரு கூம்புகளின் கன அளவுகளின் விகிதம் 1 : 4 மற்றும் அவற்றின் விட்டங்களின் விகிதம் 4.5 னில் அவற்றின் உயரங்களின் விகிதம் என்ன?
(A) 1:5
(C) 5:16
(B) 5:4
(D) 25:64
விடை – D