TNPSC Group 4 General Tamil Quiz with Answer || Unit I Section 1 Part A – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 1- இலக்கணம் ; பகுதி 1 – எழுத்து
பிரிவு A – பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல்
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு A – I. பிரித்து எழுதுதல்
ஒரு சொல்லை இரு வேறு சொற்களாக பொருள் தரக்கூடிய வகையில் பிரிப்பது பிரித்து எழுதுதல் எனப்படும். எடுத்துக்காட்டாக, நிலவென்ற என்ற சொல்லை நிலவு + என்ற என பிரித்து எழுத வேண்டும். இவ்வாறு, கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை சரியாக பிரித்து எழுதவும்.
அ. சிலப்பதிகாரம் –
- சிறப்பு + அதிகாரம்
- சிலம்பு + அதிகாரம்
- சிலம்பு + அதிகம் + காரம்
- சிவப்பு + அதிகாரம்
ஆ. நிலவொளி –
- நிலவு + ஒளி
- நிலா + வாளி
- நிலா + ஒளி
- நிலவு + ஓளி
இ. வண்ணப்படங்கள் –
- வண்ணம் + படங்கள்
- வண்ண + படங்கள்
- வண்ணத்து + படங்கள்
- வண்ண + பாடங்கள்
ஈ. பாசிலை –
- பாசு + இலை
- பைசு + இலை
- பசுமை + இலை
- பாசி + இலை
உ. பாகற்காய்
- பாகற் + காய்
- பாகு + ஆர்காய்
- பாகு + கல் + காய்
- பாகு + அல் + காய்
பிரிவு A – II . சேர்த்து எழுதுதல்
இரு வேறு பொருள் தரக்கூடிய சொற்களை ஒரு பொருள் தரும் சொல்லாக இணைப்பது சேர்த்து எழுதுதல் எனப்படும். எடுத்துக்காட்டாக, பெருமை + வானம் என்னும் இரு வேறு சொற்களை பெருவானம் என சேர்த்து எழுத வேண்டும். இவ்வாறு, கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை சரியாக சேர்த்து எழுதவும்.
அ. எட்டு + திசை –
- எட்டுத்திசை
- எட்டுதிசை
- எட்டசை
- எட்டுட்திசை
ஆ. இனிமை + சொல் –
- இனிமைச்சொல்
- இனிசொல்
- இன்சொல்
- இனிமைசொல்
இ. பழமை + தமிழர் –
- பழமைதமிழர்
- பழந்தமிழர்
- பழத்தமிழர்
- பழமைத்தமிழர்
ஈ. பூ + இனம் –
- பூஇனம்
- பூனம்
- பூப்பினம்
- பூவினம்
உ. ஐந்து + பெருமை + காப்பியம்
- ஐந்துபெருமைகாப்பியம்
- ஐம்பெருங்காப்பியம்
- ஐந்துபெருகாப்பியம்
- ஐம்பெருக்காப்பியம்
இவ்வினாக்களுக்கான சரியான விடையை கண்டறிய கீழே உள்ள PDF- ஐ பார்வையிடவும்.


























