TNPSC Group 4 2025  – Syllabus, Notification, Exam Date குறித்த முழு விவரங்களுடன்!

0

TNPSC Group 4 2025  – Syllabus, Notification, Exam Date குறித்த முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், Typist, Junior Assistant, Clark மற்றும் கிராம நிர்வாக அலுவலர்  ( VAO )  உள்ளிட்ட பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் TNPSC ஆணையமானது  TNPSC Grp 4 தேர்வை நடத்தி வருகிறது. 

மேலும், 2025 ம் ஆண்டிற்கான TNPSC Grp 4  தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்போது இருந்தே இத்தேர்வுக்கு தயாராகுவதே சால சிறந்தது ஆகும். மேலும், இத்தேர்வுக்கு தயாராகுவதற்கு தேர்வின்  பாடத்திட்டம் பற்றி அறிந்து இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே, உங்களுக்காக, இத்தேர்வின் மதிப்பெண் முறை மற்றும் பாடத்திட்டத்தினை கீழே விரிவாக கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

TNPSC Study Materials in Tamil – PDF Free Download  

TNPSC Group 4 Notification 2025 

கடந்த வருடம் TNPSC ஆணையம் வெளியிட்ட TNPSC Annual Planner 2025-ல் , TNPSC Group 4 தேர்வு குறித்த அறிவிப்பானது ஏப்ரல் மாதத்தில்  அதாவது 25 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்பட்டு, 13 ஜூலை 2025 அன்று  தேர்வானது நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

TNPSC Group 4  Exam 2025 

தேர்வு ஆணையக்குழு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் TNPSC Group 4
பதவிகள் Typist, Junior Assistant, Clark மற்றும் கிராம நிர்வாக அலுவலர்  ( VAO ) etc..
காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
தேர்வு தேதி 13 ஜூலை 2025
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ இணையத்தளம் tnpsc.gov.in

TNPSC Group 4 2025 Exam Date and Other Important Dates 

கடந்த வருடம் TNPSC ஆணையம் வெளியிட்ட TNPSC Annual Planner 2025 தரவுகளின் அடிப்படையில் TNPSC Group 4  2025 தேர்வானது 13.07.2025 அன்று நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

                             முக்கிய நிகழ்வுகள்       தேதிகள் 
TNPSC Group 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் நாள் 25 ஏப்ரல் 2025
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் மே 2025
விண்ணப்பிக்க இறுதிநாள் மே 2025
நுழைவு சீட்டு ( Hall  Ticket )  வெளியிடப்படும் நாள்
தேர்வு நடைபெறும் நாள் 13 ஜூலை 2025
தேர்வு முடிவு வெளியாகும் நாள்

RRB Group D Syllabus 2025 – முழு விவரங்களுடன்!

TNPSC Group 4 Exam Pattern 2025

TNPSC Group 4 2025 தேர்வானது 3 மணி நேரம்  200 கேள்விகளுடன் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. மேலும் இத்தேர்வானது  Objective – Type Paper ( OMR Method ) முறையில் நடைபெறுகிறது. 

                                          TNPSC குரூப் 4 தேர்வு முறை 
பாடங்கள்  கேள்விகள்  மதிப்பெண்கள்  தேர்ச்சி அடைய தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்  நேரம் 
Part A (பொது அறிவு ) 75 150 90 3 மணி நேரம் 
Part B (திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 25
Part C (பொது தமிழ்) 100 150

TNPSC Group 4 Exam 2025 Syllabus 

பகுதி அ : பொது அறிவு ( பத்தாம் வகுப்பு தரம் – 75 மதிப்பெண்கள் )

அலகு I : பொது அறிவியல் ( 5 கேள்விகள் )

பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலின் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும் – தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிமாணம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம். மனித நோய்கள் ; சுற்றுப்புற சூழல் அறிவியல் ; அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள். 

அலகு II : புவியியல் ( 5 கேள்விகள் )

புவி அமைவிடம் – இயற்கை அமைப்புகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர்நிலைகள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள் ; போக்குவரத்து – தகவல் தொடர்பு ; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில்  மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ; சுற்றுசூழல் – பருவநிலை மாற்றம் ; புவியியல் அடையாளங்கள் ; நடப்பு நிகழ்வுகள். 

அலகு III  : இந்தியாவின் வரலாறு , பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் ( 10 கேள்விகள் )

சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடர்கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி. ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார்,  ஜவகர்லால் நேரு, ரவீந்தர்நாத் தாகுர், மகாத்மா காந்தி, காமராசர், மௌலானா அபுல் கலாம் அசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திரா போஸ், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் மற்றும் பல தேசியத் தலைவர்கள்; தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்; இந்திய பண்பாட்டின் இயல்புகள்; வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு;  இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு. 

அலகு IV : இந்திய ஆட்சியியல் ( 15 கேள்விகள் )

இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கியக் கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய  நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் அயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்; தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சி முறைகளும்; நடப்பு நிகழ்வுகள். 

அலகு V : இந்தியப்  பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் ( 20 கேள்விகள் )

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம், மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச்  சீர்த்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள் – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூக பிரச்சனைகள் – மக்கள்தொகை, நலவாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை; சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின்  கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்; தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதாரத்தில் அவற்றின் தாக்கங்களும்; நலன்சார் அரசு திட்டங்கள்; தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.    

அலகு VI  : தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் ( 20 கேள்விகள் )

தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்ககாலம்  முதல் இக்காலம்  வரையிலான தமிழ் இலக்கியம்; திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்கக்கால கிளர்ச்சிகள் – விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு;  தமிழ்நாட்டின் பல்வேறு சீர்த்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

பகுதி ஆ : திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்                ( பத்தாம் வகுப்பு தரம் – 25 மதிப்பெண்கள் )

அலகு I : திறனறிவு ( 15 கேள்விகள் ) 

சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொது காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.  

அலகு II  : காரணவியல் ( 10 கேள்விகள் )

தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை. 

பகுதி இ : தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு                  (பத்தாம் வகுப்பு தரம் – 100 மதிப்பெண்கள் )

அலகு I : இலக்கணம் ( 25 கேள்விகள் )

எழுத்து :  

பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் – சந்திப்பிழை – குறில், நெடில் வேறுபாடு – லகர,ளகர,ழகர வேறுபாடு – னகர,ணகர வேறுபாடு -ரகர, றகர வேறுபாடு – இனவெழுத்துக்கள் அறிதல் – சுட்டு எழுத்துக்கள் – வினா எழுத்துக்கள்- ஒருமை பன்மை     அறிதல்.

சொல் :

வேர்ச்சொல் அறிதல் – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்ச வகை அறிதல் – அயற்சொல் – தமிழ்ச்சொல் – எதிர்சொல் – வினைச்சொல் எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை அறிதல் – இரண்டு வினை சொற்களின் வேறுபாடு அறிதல்.              

அலகு II : சொல்லகராதி ( 15  கேள்விகள் )

  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதல் ,   ஓரெழுத்து ஒரு மொழி,  உரிய பொருளை கண்டறிதல் – பொருந்த சொல்லை கண்டறிதல்,  ஒரு பொருள் தரும் பல சொற்கள்,  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ; ஒரு பொருள் பன்மொழி – இரு பொருள் குறிக்கும் சொற்கள் –  பேச்சு வழக்கு , எழுத்து வழக்கு – சொல்லும் பொருளும் அறிதல் –  ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
  2. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல் – பொருத்தமான பொருளை தெரிவு செய்தல் – ஊர் பெயர்களின் மரூஉவை  எழுதுக – பிழை திருத்துக – பேச்சு வழக்கு சொற்களுக்கு இணையான தூய தமிழ் சொற்களை இணைத்தல்.
  3.  பேச்சு வழக்கு தொடர்களில் உள்ள பிழை திருத்தம் – சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குதல் – அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்த்தல் – பொருள் தரும் ஓர் எழுத்து – பல பொருள் தரும் ஒரு சொல்லைக்  கூறுக.

அலகு III : எழுத்து திறன் ( 15 கேள்விகள் )

  1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் அமைத்தல் – தொடர் வகைகள் – செய்வினை, செய்யப்பாட்டு வினை – தன்வினை, பிறவினை – ஒருமை , பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
  2.  மரபுத் தமிழ் : திணை மரபு ( உயர் திணை, அஃறிணை ) – பால் மரபு : ஆண் பால், பெண் பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் – இளமைப் பெயர் – ஒலி மரபு, வினை மரபு, தொகை மரபு – நிறுத்தல் குறியீடுகள். 

அலகு IV : கலை சொற்கள் ( 10 கேள்விகள் )

பல்வேறு துறை சார்ந்த கலை சொற்களை அதாவது, அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல்,  தகவல் தொழில்நுட்பம், ஊடகம், தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலை சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிந்திருக்க வேண்டும்.

அலகு V   : வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் ( 15 கேள்விகள் )

கொடுக்கப்பட்ட பத்தியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு  சரியான விடையை தேர்ந்தெடுத்தல் – [செய்தித்தாள் – தலையங்கம் – முகப்பு செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் இவற்றை வாசித்தல்]  – புரிந்து கொள்ளும் திறன் – உவமை தொடரின் பொருளறிதல், மரபு தொடரின் பொருளறிதல், பழமொழிகள் பொருளறிதல், ஆவண உள்ளடக்கங்களை புரிந்துக் கொள்ளுதல்.

அலகு VI  : எளிய மொழி பெயர்ப்பு (  5 கேள்விகள் )

ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அறிதல் வேண்டும் – பயன்பாட்டில் உள்ள ஆங்கில சொல்லை மொழிபெயர்த்தல் வேண்டும் – [ ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்துக் கொள்ளுதல் ] 

அலகு VII  : இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் ( 15 கேள்விகள் )

திருக்குறள் தொடர்பான செய்திகள்  {இருபது அதிகாரம் மட்டும் – ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை , விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை,  கண்ணோட்டம், அன்புடைமை,  கல்வி,  நடுநிலைமை,  கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை} – மேற்கோள்கள் – அறநூல் தொடர்பான செய்திகள் { நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள் } – தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவலர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு. போப், வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள் – தமிழ் சான்றோர் பற்றிய செய்திகள் : பாவேந்தர், டி.கே. சிதம்பரனார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலு நாச்சியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர். 

Download the Syllabus PDF in Tamil 

Download the Syllabus PDF in English 

Official Site 

 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!