TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC குரூப் 4 தேர்வில் 100% வெற்றி நிச்சயம் - முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 2 தேர்வு தேதி:

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II முதன்மை எழுத்துத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 25.02.2023 அன்று  நடத்தப்பட்டது.முன்னதாக இந்த தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? இப்படி படியுங்க!!

TNPSC Group 2 Mains Result 2023 :

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-II (நேர்காணல் பதவிகள்) (குரூப்-II சேவைகள்) ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான 1:3 என்ற விகிதத்தில் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண் கொண்ட பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

முதன்மை எழுத்துத் தேர்வுக்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவேற்றிய ஆவணங்களின் அடிப்படையில்  சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன விதிகள் மற்றும் பிற நிபந்தனைகளின் அடிப்படையில் தற்காலிகமாக திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!