மீண்டும் பணிநீக்கத்தை அறிவித்த Google நிறுவனம் – ஊழியர்கள் ஷாக்!! 

0
மீண்டும் பணிநீக்கத்தை அறிவித்த Google நிறுவனம்
Google நிறுவனம் கடந்த ஆண்டில் தான் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
பணி நீக்கம்:

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான கூகுள் நிறுவனம் பொருளாதார இழப்பை சரிசெய்யும் நோக்கில் அவ்வப்போது பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டில் திடீரென கூகுள் நிறுவனம் திடீரென 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. அதே போல, இந்தாண்டும் பணி நீக்கம் செய்யும் முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளது.

அதன்படி, கூகுள் நிறுவனம் செலவின குறைப்பில் ஈடுபடுவதாகவும், நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக டிஜிட்டல் அசிஸ்டென்ட், ஹார்ட்வேர், இன்ஜினியிரிங் அணிகளில் இருந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல, X நிறுவனத்தில் இருந்தும் பாதுகாப்பு பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!