TNPSC Group II / IIA தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் – சற்றுமுன் வெளியீடு!

0
TNPSC Group II / IIA தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் - சற்றுமுன் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது Group II / IIA பதவிகளுக்கென நடைபெற்ற தேர்வுகளின் இறுதி கட்ட மதிப்பெண் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC மதிப்பெண் பட்டியல்:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Group II / IIA பதவிகளுக்கென 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 5529 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 23.03.2022 அன்று TNPSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பதவிகளுக்கான TNPSC Group II / IIA பதவிகளுக்கென முதல் நிலை தேர்வானது 21.05.2022 அன்றும், முதன்மை தேர்வானது 25.02.2023 அன்று நடத்தப்பட்டது. பிறகு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு மூன்றாம் கட்ட நேர்காணலானது 01.04.2024 அன்றும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலும், இறுதி மதிப்பெண் பட்டியலும் இன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இதனை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற TNPSC-யின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!