TNPSC Group 1 பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

0
TNPSC Group 1 பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
TNPSC Group 1 பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு - மிஸ் பண்ணிடாதீங்க !
TNPSC Group 1 பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க !

Deputy Collector, Assistant Commissioner போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை (Notification No. 16/2022) TNPSC என்னும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் இன்றே (22.08.2022) முடிய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Group 1 வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • TNPSC இந்த ஆண்டு நடத்த உள்ள Group 1 தேர்வு மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner (Commercial Taxes), Deputy Registrar of Cooperative Societies, Assistant Director of Rural Development, District Employment Officer in Tamil Nadu General Service ஆகிய பணிகளுக்கு என 92 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 01.07.2022 அன்றைய நாளின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 எனவும் அதிகபட்ச வயது வரம்பு 40 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Level 22 என்ற ஊதிய அளவின் படி இந்த அரசு பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination) மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அனைவரும் ரூ.150- பதிவு கட்டணமாகவும், ரூ.100/- Preliminary Examination தேர்வுக்கான தேர்வு கட்டணமாகவும், ரூ.200/- Main Examination தேர்வுக்கான தேர்வு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

TNPSC Group-1 விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த TNPSC Group-1 தேர்வுக்கு பதிவு செய்ய தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-மூலம் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இன்று (22.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த கணமே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!