TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 2 Part F – PDF Download…!!
Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு
அலகு 2 – சொல்லகராதி
பிரிவு F – ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்லை அறிதல் .
TNPSC Group 4 2025 VAO Questions:
பிரிவு F – 1. ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்லை அறிதல்.
தமிழ் மொழியின் தனி சிறப்பே, ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருப்பதுதான். மேலும், இது ஒரு மொழியின் இலக்கண, இலக்கிய வளத்தை பிரதிபலிக்கிறது. மேலும், இது தொடர்பான வினாக்கள் அரசு போட்டித் தேர்வுகளில் கட்டாயம் கேட்கப்படுகின்றன. எனவே, உங்களுக்கு உதவும் வகையில், ஒரு சொல்லுக்கு இணையான பல பொருள் தரும் முக்கிய சொற்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘அறிவுரை’
- நேசம், உபதேசம், சிதைவு
- நிலை, செயல்திறன், சத்தி
- தென்றல், விளக்கம், விளைவு
- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
- ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘காற்று’
- வெளிச்சம், கதிர், பவனம்
- வளி, மாருதம், தென்றல், பவனம்
- கரை, கங்கை, மழலை
- ஆறு, நிலம், விழி
3. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘இரவு’
- புலன், செயல்திறன், பகுதி
- அறம், மகவு, கதிர்
- இராத்திரி
- ஆறு, நிலம், விழி
4. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘ஒளி’
- செயற்கை நுண்ணறிவு, அறிவு
- விளைவு, அறிவு, விளக்கம்
- வெளிச்சம், சுடர், பிரகாசம்
- அணி, ஆடை, சூடுதல்
5.ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘குழந்தை’
- மகன், மகள்கள், பிள்ளை
- மகவு, குழவி, சேய், சிசு, மழலை
- பிஞ்சு, மரியாதை, பரிவு
- அழகு, கோலம்
6. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘தரித்தல்’
- ஆடை, அணிகலம், விலங்கு
- நிலம், சுடுதல், அழகு
- அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
- விளையாட்டு, சந்தை
7. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘ஆதி’
- கலை, விளைவு, விளக்கம்
- முதல், ஆரம்பம், தொடக்கம்
- இடம், பழக்கம், ஆடை
- பருவம், மரணம்
8. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘ஞானம்’
- அறிவு, ஆற்றல், புத்தி, வித்தை
- சிந்தனை, சிறப்பு, விவேகம்
- அறிவுரை, மெய், நிதானம்
- கொள்கை, உணர்வு
9. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘ஆதி’
- கலை, விளைவு, விளக்கம்
- முதல், ஆரம்பம் , தொடக்கம்
- இடம், பழக்கம், ஆடை
- பருவம், மரணம்
10. ஒரு பொருள் தரும் பல சொற்களை தேர்வு செய்க. ‘அகிம்சை’
- மெய், வாய்மை, சத்தியம்
- பண்பு, அறிவு, விவேகம்
- விளக்கம், குருதி, இன்னல் செய்யாமை
- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF யை பதிவிறக்கவும்.



























