TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

0

TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வில் தேர்வாகும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.குரூப் 1 தேர்வில் General Studies பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடுமையாக உள்ளது.எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. 2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையானது

(A) 3

(B) 4

(C) 5

(D) 6

விடை : D

2. எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மகா அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n -வகை குறைக்கடத்தியாக மாறும்

(A) 6

(B) 5

(C) 4

(D) 3

விடை : B

3. ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?

(A) தண்ணீரில்

(B) காற்றில்

(C) உலோகத்தில்

(D) வெற்றிடத்தில்

விடை : C

4. கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது.

(A) இருநிலை வாழ்விகள்

(B) சிம்பான்சீ

(C) சால்மன்

(D) அணில்கள்

விடை : A

5. சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்

(A) ரிஷபர்

(B) பத்ரபாகு

(C) பார்சவா

(D) நேமிநாதா

விடை : D

Capgemini நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரங்களுடன் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

6. விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரை 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?

(A) குத்புதீன் அய்பெக்

(B) ஃபிரோஸ் ஷா துக்ளக்

(C) கிஸிர்கான்

(D) சிக்கந்தர் லோடி

விடை : B

7. ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது?

(A) தலைக்கோட்டை போர்

(B) தக்கோலப் போர்

(C) பானிபட் போர் 1761

(D) அடையாறு போர்

விடை : A

8. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?

(A) சரோஜினி நாயுடு

(B) அன்னிபெசன்ட்

(C) விஜயலட்சுமி பண்டிட்

(D) இந்திரா காந்தி

விடை : B

9. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?

(A) சர்தார் வல்லபாய் பட்டேல்

(B) சி. ராஜகோபாலாச்சாரி

(C) பி.ஆர். அம்பேத்கர்

(D) R.K. சண்முக செட்டியார்

விடை : D

10. சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது

(A) வேளாண்மை

(B) கிராமப்புற மின்சாரம்

(C) நகர்புற மின்சாரம்

(D) தொழில்கள்

விடை : C 

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!