அரசின் புதிய உத்தரவால் TNPSC தேர்வுகளின் நிலை என்ன?

1
அரசின் புதிய உத்தரவால் TNPSC தேர்வுகளின் நிலை என்ன
அரசின் புதிய உத்தரவால் TNPSC தேர்வுகளின் நிலை என்ன

அரசின் புதிய உத்தரவால் TNPSC தேர்வுகளின் நிலை என்ன?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார இழப்புகளை அரசு எதிர் கொண்டு வருகிறது.20 சதவீத செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல புதிய அரசாணை வெளியிட்டது. அதில் குறிப்பாக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை எனும் அறிவிப்பால் இந்த வருடம் அரசு தேர்வை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் நிலைமை கேள்வி குறியாகி உள்ளது.

TNPSC தேர்வு:

குறிப்பாக ஆண்டு முழுவதும் டி என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப படுவது வழக்கம். அரசின் இந்த அறிவிப்பால் டி.என்.பி.எஸ்சி தேர்வுகள் நடத்தப்படுமா என்கிற கேள்வி தேர்வர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

தேர்வுகளின் நிலை என்ன?

அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் டி என்.பி.எஸ்.சி தேர்வுகள், காலி பணியிடங்களுக்கே நடத்தப்படுவதாகவும் புதிய பணியிடங்களுக்காக அல்ல என்றும் டி என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை

டி.என்.பி.எஸ்.சி இந்த ஆண்டு 10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது நிலவும் சூழல் காரணமாக இந்த பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Sir , when will you be announced the joining date for tnpsc group 4 exam 2019- 2020( i.e, September 1-2019)….. please inform sir we are eagerly waiting
    to join in our post….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!