TNPSC தேர்வு எழுத விருப்பமா? அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. பொது தமிழ் மற்றும் General Science ஆகிய பாடங்களை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. ‘நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் 14.
(A) பதிற்றுப்பத்து
(B) பரிபாடல்
(C) புறநானூறு
(D) குறுந்தொகை
விடை : (C)
2. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
(A) தேன்மழை
(B) குயில்
(C) தென்றல்
(D) இந்தியா
விடை : (B)
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
3. ‘புனையா ஓவியம்’ என்பதன் பொருள்
(A) வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
(B) பூக்களால் வரைவது
(C) மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
(D) கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
விடை : (D)
4. கிருஷ்ணகிரி, கோத்தகிரி – இதில் காணப்படும் ‘கிரி’ எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
(A) கல்லிடைக் குறிச்சி
(B) பாறை
(C) மலை
(D) கோட்டை
விடை : (C)
5. “இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுவிமணி
(D) நாமக்கல் கவிஞர்
விடை : (B)


























