TNPSC தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
TNPSC தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது (TNPSC) வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள Combined Accounts Services தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNPSC நுழைவுச்சீட்டு 2024:

தமிழக அரசு அலுவலகங்களில் Accounts Officer, Manager, Senior Officer ஆகிய பணிகளுக்கென ஏற்பட்டுள்ள 52 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது TNPSC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் TNPSC Combined Accounts Services என்னும் எழுத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் இதில் கூறப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 08.12.2023 அன்று வரை இணையவழி மூலம் பெறப்பட்டது.

தற்போது TNPSC Combined Accounts Services எழுத்து தேர்வானது கணினி வழித்தேர்வு (CBT) முறைப்படி 05.02.2024, 06.02.2024 ஆகிய தேதிகளில் Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது இன்று (24.01.2024) வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய நுழைவுச் சீட்டை தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பின் முகப்பு பக்கத்தில் உள்ள Hall Ticket Download என்ற இணைப்பின் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!