தமிழக அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2024 – 70+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprentice பணிக்கென காலியாக உள்ள 79 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.9,000/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென காலியாக உள்ள 79 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – நாள் ஒன்றுக்கு ரூ.588/- சம்பளம்!
ஊதிய விவரம்:
Graduate Apprentice – ரூ. 9,000/-
Technician (Diploma) Apprentice – ரூ. 8,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


























