தமிழக அரசில் ரூ.1,38,500/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

0
தமிழக அரசில் ரூ.1,38,500/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2014 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 2014 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / Diploma / B.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனம் – அரசு அனுமதி!

  • 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18200/- முதல் ரூ.138500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.03.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!