இதனை செய்ய வேண்டாம்.. தமிழக மின் வாரிய பொறியாளர்களுக்குக் பறந்த அதிரடி உத்தரவு
தமிழக மின் வாரியத்தின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்கள் எக்காரணம் கொண்டும் துறை சார்பாக வழங்கிய மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து வைக்கக் கூடாது என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
புகார் எண்:
தமிழகத்தில் தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இத்தகைய சூழலில் சில பகுதிகளில் மின் கம்பங்கள் அருந்து விழுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் 94987 94987 என்ற எண் வாயிலாகவும், நுகர்வோர் சேவை மையம் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உபரி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – டிசம்பர் 20ல் கலந்தாய்வு!
இந்த புகாரை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மின் வாரியத்தின் கீழ் பணியாற்றும் பொறியாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் எண்ணை எக்காரணம் கொண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்து வைக்க கூடாது என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சிலர் தங்களுக்கு வழங்கியுள்ள மொபைல் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விடுவதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொறியாளர்கள் 24 மணி நேரமும் மொபைல் போன் எண்ணை இயக்கத்தில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.