தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2026: அதிகாரப்பூர்வ ஆனுவல் பிளானர் முழு விவரங்கள்!

0

TRB Official Annual Planner 2026:
TET மற்றும் ஆசிரியர் நியமனத் தேர்வுகளின் அதிகாரப்பூர்வ கால அட்டவணை!

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரக் காத்திருக்கும் தேர்வர்களுக்கான மிக முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB Portal) தனது 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ TRB Annual Planner கால அட்டவணையை வெளியிட்டுள்ளது 

அதிகாரப்பூர்வ TRB Annual Planner 2026 அட்டவணை

வ.எண்  தேர்வின் பெயர்
(Name of the Post)
அறிவிப்பு மாதம் (Notification) தேர்வு நடக்கும் தேதிகள் (Exam Dates)
1 TN TET 2026 (Working Teachers) பிப்ரவரி  2026  ஜூலை  2026 
2 BT Assistant / BRTE (UG TRB) மார்ச் 2026  ஜூலை 2026 
3 TN-TET Paper 1 & 2 (General – Cycle 1 & 2) மே 2026 / அக்டோபர்2026  ஜூலை 2026 / டிசம்பர் 2026 
4 PG TRB (Post Graduate Assistant) காலிப்பணியிடங்கள் அடிப்படையில்  ஆண்டின் இறுதியில் (எதிர்பார்க்கப்படுகிறது)

2026 முக்கிய தேர்வுகளின் தற்போதைய நேரடி நிலவரம்

1. TN TET 2026 (பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வு)

    • அதிகாரப்பூர்வ அப்டேட்:
      புதுச்சேரி மற்றும் தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதி பெறாமல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு TET அறிவிப்பு பிப்ரவரி 13 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது 
    • தேர்வு மற்றும் திருத்தங்கள்:
      இதற்கான தேர்வுகள் ஜூலை 2026 கணினி வழியில் (CBT) நடத்தப்பட உள்ளன மேலும், விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத் திருத்த விண்டோ (Application Correction Window) மே 27 அன்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

2. UG TRB 2026 (பட்டதாரி ஆசிரியர் நியமனத் தேர்வு)

    • தற்போதைய நிலை:
      இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (BT Assistant) அதிகாரப்பூர்வ தேர்வு ஜூலை 2026-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
    • முக்கிய தகுதி:
      இத்தேர்வை எழுத நீங்கள் கண்டிப்பாக TNTET Paper 2 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DIRECT LINK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!