தமிழகத்தில் திருநங்கைகளுக்கான விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஆட்சியர் தகவல்!

0
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் திருநங்கைகளுக்கான விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு.. ஆட்சியர் தகவல்!

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு இணையதளம் வாயிலாக பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விருது:

இன்றைக்கு திருநங்கைகள் அனைத்து உரிமைகளையும் பெற்று தடைகளை தாண்டி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று சிறந்த சேவை புரிந்த திருநங்கைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆந்திர மாநில அரசின் புதிய உத்திரவாத ஓய்வூதிய திட்டம் !

அந்த வகையில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான திருநங்கைகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற தகுதியுடையவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள் குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது உதவி இருக்க வேண்டும்.

மேலும் அவர் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. அத்துடன் அரசின் உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். இத்தகைய தகுதி உடையவர்கள் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயசரிதை, சேவை பற்றிய செயல் முறை விளக்கம், ஆகியவற்றுடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலர் சென்னை – 01 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 15ஆம் தேதி அன்று திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது மற்றும் 1 லட்சத்திற்கான காசோலை, சான்றுகள் அரசால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!