TNTET Paper II தேர்வு தேதி – வெளியீடு!
2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் 2க்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு பற்றிய விவரங்கள் அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன.
TNTET Paper II தேர்வு தேதி:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கள் நடைபெற்று வருகிறது. அதன் படி, 2022ம் ஆண்டிற்கான தாள் 1க்கான கணினி வழித் தேர்வானது (Computer Based Examination) தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தாள் 2 க்கான தேர்வு எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு: அட்மிட் கார்டு வெளியிடும் தேதி ஜன.9க்கு ஒத்திவைப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஜனவரி மாதம் 31.01.2023 முதல் பிப்ரவரி மாதம் 12.02.2023 வரை உள்ள தேதிகளில் தாள் 2 தேர்வு கணினி வழி முறையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான பயிற்சி தேர்வுகள், தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன் வழங்கப்பட உள்ளது. அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.
TNTET Paper II தேர்வு நுழைவுச்சீட்டு:
தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டை விண்ணப்பதாரர்கள் ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்களுக்கு, தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.