GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு: அட்மிட் கார்டு வெளியிடும் தேதி ஜன.9க்கு ஒத்திவைப்பு!

0
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு: அட்மிட் கார்டு வெளியிடும் தேதி ஜன.9க்கு ஒத்திவைப்பு!
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு: அட்மிட் கார்டு வெளியிடும் தேதி ஜன.9க்கு ஒத்திவைப்பு!
GATE 2023 தேர்வர்களின் கவனத்திற்கு: அட்மிட் கார்டு வெளியிடும் தேதி ஜன.9க்கு ஒத்திவைப்பு!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT Kanpur) கழகத்தால் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) அனுமதி சீட்டு இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதனை வெளியிடுவதற்கான தேதியை ஒத்தி வைப்பதாக IIT Kanpur தெரிவித்துள்ளது.

அனுமதி சீட்டு

நாட்டில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், கட்டிடக்கலை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு டெல்லி, பம்பாய், குவாஹாத்தி, கான்பூர், மெட்ராஸ் ரூர்க்கி, காரக்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய ஒருங்கிணைப்பு வாரியம் ஆகியவை மூலமாக சுழற்சி அடிப்படையில் நடத்தப்படுகிறது.

EPFO கணக்குதாரர்கள் கவனத்திற்கு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறைகள் இதோ!

Follow our Twitter Page for More Latest News Updates

அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT Kanpur) சார்பாக நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வானது பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் செயல்பாட்டு காரணத்திற்காக அனுமதி சீட்டு வெளியிடும் தேதியை ஒத்தி வைப்பதாக IIT கான்பூர் அறிவித்துள்ளது. அதன்படி அனுமதி சீட்டு வருகிற ஜனவரி 9ம் தேதி முதல் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் gate.iitk.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களின் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!