தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

4
தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 5 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் அடுத்தகட்டமாக 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததாலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

1 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்வின்றி தேர்ச்சி’ – மாநில அரசு திட்டம்!!

அதன் பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையையும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது. இதனால் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி 11ம் வகுப்பிற்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வினை ரத்து செய்யலாமா? எனவும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், 5 – 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து சுகாதாரத்துறையிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனவும் அமைச்சர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. Please not open school june month reopen please sir 🥺🥺😟😓😭

    Why means now online class going

    Next school reopen 9th please

  2. தற்போது புதிய வகை கொரானா அதிகரித்து வரும் நிலையில் சிறு பிள்ளைகள் நலன் கருதி ஜூன் மாதம் பள்ளி திறப்பதே அனைத்து பெற்றோரின் விருப்பமாக உள்ளது அதை அரசாங்கம் தான் செயல் படுத்த வேண்டும்

  3. 12 ம் வகுப்பு பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு நோய் தொற்று வந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது இதில் சின்ன பிள்ளைகள் என்றால் ,,, அதனால் ஜூன் மாதம் திறந்தாள் நலமா இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!