தமிழக அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நிறுவனங்கள் பதிவு
தமிழக அரசானது தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தில் காலியாக உள்ள தனியார்துறை பணியிடங்களை பதிவேற்ற தனியாக ஒரு இணையதளத்தினை தமிழக அரசு ஏற்படுத்தியது.
கடந்த மே மாதம் 16 ஆம் தேதியன்று இந்த இணையதளத்தினை தொடங்கி கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் நோக்கில் இணையதளம் தொடங்கப்பட்டது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கு ஏற்ற பணி வாய்ப்பு பெறலாம்.
தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்கள், அதற்கான தகுதி, சம்பளம் ஆகியவற்றை இதில் பதிவேற்றம் செய்யலாம். கட்டணமின்றி இந்த சேவை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் இந்த இணையதளத்தில் 418 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 5,600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே வேலையில்லாதவர்கள் இதன் வாயிலாக பயன் பெறலாம்.
தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு இணையதளம்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Pls jops