தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) மின்தடை ஏற்படுமா?? விளக்கம் இதோ!!
தமிழக துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அதே போல நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யபடுமா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படாது. அதற்கு மறுநாள் திங்கட்கிழமை (அக்டோபர் 28) வடபெரும்பாக்கம், புதுக்குறிச்சி, பூளவாடி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.



























