புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அலர்ட்டா இருங்க… ஆய்வு பணியில் அதிகாரிகள்!

0
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அலர்ட்டா இருங்க... ஆய்வு பணியில் அதிகாரிகள்!
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அலர்ட்டா இருங்க... ஆய்வு பணியில் அதிகாரிகள்!
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அலர்ட்டா இருங்க… ஆய்வு பணியில் அதிகாரிகள்!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற தற்போது ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் பலரும் புதிய ரேஷன் கார்டை பெற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக 35 வயத்திற்குள் உள்ள இளம் தம்பதியினர் மற்றும் புதிதாக திருமணம் முடிந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து வருகின்றனர்.

TNTET ஆசிரியர் நியமனத்தேர்வுக்கான பாட திட்டம் – வெளியான முக்கிய அப்டேட்!

புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர்களுடன் ஒரே வீட்டில் வசித்து கொண்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது தெரிய வந்துள்ளது. ஒரு மாதத்தில் ரேஷன் கார்டு வேண்டி சராசரியாக 50 முதல் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இவற்றில் தகுதியுடையோர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்ததவர்கள் தகுதியானவர்களா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!