அரசு பேருந்துகளில் 5 கிலோ வரை லக்கேஜ் கட்டணம் இல்லை – போக்குவரத்துதுறை அறிவிப்பு!

0
அரசு பேருந்துகளில் 5 கிலோ வரை லக்கேஜ் கட்டணம் இல்லை - போக்குவரத்துதுறை அறிவிப்பு!
அரசு பேருந்துகளில் 5 கிலோ வரை லக்கேஜ் கட்டணம் இல்லை - போக்குவரத்துதுறை அறிவிப்பு!
அரசு பேருந்துகளில் 5 கிலோ வரை லக்கேஜ் கட்டணம் இல்லை – போக்குவரத்துதுறை அறிவிப்பு!

மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் ஐந்து கிலோ வரையிலான சுமைகளை இலவசமாகவே கொண்டு செல்லலாம் என போக்குவரத்து துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமைகளுக்கு இலவசம்:

தமிழகத்தில் உள்ள மாநகரப் பேருந்துகளில் வியாபாரிகள் பலரும் வியாபாரக் கூடைகள் மற்றும் மூட்டைகளை பேருந்துகளின் மூலமாக பிற ஊர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அதிக எடை கொண்ட பொருட்களை பேருந்தில் ஏற்றுவதற்கு அனுமதிக்க கூடாது என புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், மாநகரப் பேருந்தில் பயணி ஒருவருக்கு 5 கிலோ வரை இலவசமாக பொருட்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தற்போது அறிவித்திருக்கிறது.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? அலர்ட்டா இருங்க… ஆய்வு பணியில் அதிகாரிகள்!

மேலும், பயணி ஒருவர் ஐந்து முதல் 20 கிலோ வரையிலான பொருட்களைக் கொண்டு வந்தால் அவர்களுக்கு சுமை கட்டணமாக ரூபாய் 10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணத்தை வசூல் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் பேருந்துகளில் பெரிய சுமைகளை ஏற்றக்கூடாது எனவும், மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்க கொடுத்து எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக இடத்தை பிடிக்கும் படியான பெரிய சுமை கொண்ட பொருட்களை பேருந்தில் ஏற்ற நடத்துனர்கள் அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அல்லாமல் பொருட்களை மட்டும் பேருந்துகளில் ஏற்ற ஒருபோதும் நடத்துனர்கள் அனுமதிக்க கூடாது எனவும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!