தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு – அழைப்பு எண் அறிமுகம்!!

0
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு - அழைப்பு எண் அறிமுகம்!!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு - அழைப்பு எண் அறிமுகம்!!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு – அழைப்பு எண் அறிமுகம்!!

தமிழகத்தில் அவசர கால தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த சேவையின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டு, புதிய அழைப்பு எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ்

தமிழகம் முழுவதும் அவசர கால சேவையின் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் செயல்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் 1,303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா நோயாளிகளுக்காக சிறப்பு 210 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த சேவையில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நாள் – 1 லட்சம் போலீசாருடன் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

அதன்படி கொரோனா அவசரகால பயன்பாட்டில் 210 ஆக இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள், 351 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளில் சுமார் 5,200 நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் பயனடைந்து வருகின்றனர். தினமும் 2500 கொரோனா நோயாளிகளுக்கு இந்த சேவை உதவியாக இருந்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தால் தேவைக்கு ஏற்றபடி ஆம்புலன்ஸ் சேவையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். கூடுதலாக கோவிட் கண்ட்ரோல் ரூம் என்று 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தனி கட்டுப்பாட்டு சேவை அமைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மக்கள் இந்த சேவைக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ள 044- 40067108 என்ற தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here