தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து விவகாரம் – அமைச்சர் உரையில் தகவல்கள்!
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து குறித்த விவரங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
நீட் தேர்வு ரத்து:
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். நீட் தேர்வின் காரணமாக தற்போது வரை 21 மாணவ, மாணவிகள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 50 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தமிழகத்தில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!
இத்திட்டத்தில் இதுவரை 16 லட்சம் நேரடி கையெழுத்துகள் மற்றும் 11 லட்சம் கையெழுத்துக்கள் போஸ்ட் கார்டு மூலமாகவும் பெறப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதிக்குள் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறுவது உறுதி என்றும், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தான் இந்த போராட்டத்திற்கான வெற்றியாகவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்விற்கு எதிராக திமுக உண்மையான குரல் கொடுத்து வருவதாகவும், இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளார்.