
இனி மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்..!! எப்போது அமலுக்கு வருகிறது..?? வெளியான முக்கிய தகவல்..!!
தற்போது தமிழகத்தில் மட்டும் மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் ஆனது 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து அதற்கான வரியை வசூலித்து வருகிறது. மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. பின்னர் அதற்கான அபராத தொகை செலுத்தப்படும் பட்சத்தில் மீண்டும் இணைப்புக்கான சேவைகள் வழங்கபடுவது வழக்கமான நடைமுறையாகும். இந்த விதிமுறையை மாற்றியமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதற்கான விதிமுறை மாற்றம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து முடிந்தவுடன் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார். இதற்கான முதல் கட்டமாக 1 கோடி வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு பரிசோதிக்கும் முறையில் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட உள்ளது. அதனால் வருகின்ற ஆகஸ்ட் மாததிற்கு பிறகு தமிழகம் முழுவதும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் நடைமுறையை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது”.

























