விவசாயத்திற்கு இலவசமாக குழாய்கள் அமைக்கும் திட்டம்…தமிழ்நாடு அரசின் ரூ.15,000 நிதி உதவி பெறுவது எப்படி…??

0
?????????????? ??????? ????????? ????????? ???????...????????? ?????? ??.15,000 ???? ???? ??????? ??????...??
விவசாயத்திற்கு இலவசமாக குழாய்கள் அமைக்கும் திட்டம்...தமிழ்நாடு அரசின் ரூ.15,000 நிதி உதவி பெறுவது எப்படி...??

விவசாயத்திற்கு இலவசமாக குழாய்கள் அமைக்கும் திட்டம்…தமிழ்நாடு அரசின் ரூ.15,000 நிதி உதவி பெறுவது எப்படி…??

 

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில்,  தமிழ்நாடு வேளாண்மை – விவசாயம் துறையின் சார்பில் “மூலத்தில் இருந்து வயலுக்கு தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள்” அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, இத்திட்டத்தின் மூலம் விவசாயத்திற்காக 800 மீட்டர் வரை வயலுக்கு தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் (PVC, HDPE Pipes), விவசாயிகளின் தேவைக்கேற்ப அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

EPFO விதிமுறைகளை மீறாமல் உங்க PF கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? அப்போ இதை செய்யுங்க..

அதாவது, இத்திட்டத்தின் மூலம் பொருத்தப்படும் குழாய்களுக்கு, அதன் விலையில் 50% அல்லது ரூ.15,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, அடையாள சான்று, நில உரிமை ஆவணம் அல்லது குத்தகை ஒப்பந்தம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவை இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட வேளாண் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து போதுமான ஆவணங்களுடன்  சம்மந்தப்பட்ட வேளாண் அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!