EPFO விதிமுறைகளை மீறாமல் உங்க PF கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? அப்போ இதை செய்யுங்க..

0
EPFO விதிமுறைகளை மீறாமல் உங்க PF கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? அப்போ இதை செய்யுங்க..
EPFO விதிமுறைகளை மீறாமல் உங்க PF கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? அப்போ இதை செய்யுங்க..

EPFO விதிமுறைகளை மீறாமல் உங்க PF கணக்கில் இருந்து பணம் எடுக்கணுமா..? அப்போ இதை செய்யுங்க..

ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் வருவாயில் ஒரு பகுதி, அந்நிறுவனத்தால் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் பணம் ஆனது  ஊழியர்களின் நிதி நெருக்கடி காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயல்முறையை சரிவர நிர்வகிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியரின் PF கணக்குகள் தொடர்பான அனைத்து விதிகளையும் உருவாக்குகிறது. இந்நிலையில் உங்கள் PF கணக்கிலிருந்து எப்போது, எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு….3,274 காலிப்பணியிடங்கள்…முழு விவரம் இதோ

அதாவது, ஒரு ஊழியர் தனது PF கணக்கில் இருக்கும் தொகையில் எத்தனை சதவீதத்தை, எத்தனை நாட்களில், எந்தெந்த காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து EPFO குறிப்பிட்ட விதிகளை உருவாக்கியுள்ளது. இதில் முதலாவதாக ஒரு ஊழியர் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலையிலிருந்து விலகி இருந்தால், அவர் தனது PF கணக்கிலிருந்து 75 % தொகையை எடுக்கலாம். இதை தொடர்ந்து, ஊழியர் பணிபுரியும் நிறுவனம் 6 மாதங்களுக்கு மூடப்பட்டால், PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையையும் கோர முடியும். ஆனால் நிறுவனம் மீண்டும் தொடங்கும் போது, ஊழியர் தனது சம்பளத்துடன் PF-ல் இருந்து எடுக்கப்பட்ட தொகையை 36 தவணைகளில் திரும்பிச் செலுத்த வேண்டும்.

பின்னர் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டால், அந்த ஊழியரின் PF கணக்கில் இருந்து 50 % வரை பணத்தை எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!