சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு – முறைகேடு புகாரினால் தமிழக அரசு அதிரடி !!!

0
சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு - முறைகேடு புகாரினால் தமிழக அரசு அதிரடி !!!
சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு - முறைகேடு புகாரினால் தமிழக அரசு அதிரடி !!!

சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு – முறைகேடு புகாரினால் தமிழக அரசு அதிரடி !!!

தமிழக அரசு சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சம் 1000 அதிகமான பணியிடங்களை கொண்டதாக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் ஏறக்குறைய 90% மாவட்டங்களில் இருந்து இந்த அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்த அறிவிப்புகள் வெளியாவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

21 முதல் 40 வயது வரை உள்ள 5/ 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தவறிய விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இவர்களுக்கு அதிகபட்சம் ரூ.24,000/- வரையிலும் ஊதியம் வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது திடீரென இந்த பணிகளுக்கான நடைமுறைகளை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதாவது அறிவிப்பில் கூறியுள்ளபடி நேர்காணல் நடைபெற்றால் அதிகமானோர் கலந்து கொள்வர். இதனால் கொரோனா வைரஸ் பரவ நேரிடும் என்பதனால் தற்போது இந்த அறிவிப்பு நிறுத்திவைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் மறுபுறம் பலர் இடைத்தரகர்கள் மூலமாக இந்த பணிகளுக்கு முன்னரே லஞ்சம் குடுத்து பதிவு செய்து விட்டதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் இதஹனால் தற்போதைக்கு இறுதி பட்டியலினை வெளியிட நீதிமனஞ் தடை விதித்தது. இதன் காரணமாகவும் அரசு சார்பில் இந்த நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்களை வெளியாகிறது.

Download Notice PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!