தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் – CEO உத்தரவு!!

0
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் - CEO உத்தரவு!!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் - CEO உத்தரவு!!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் – CEO  உத்தரவு!!
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மாவட்டத்தை சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு Work Book and Bridge Course புத்தகங்களை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வின்றி தேர்ச்சி:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையிலும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் கற்பிக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்த சமயத்தில் பள்ளிகள் செயல்பட்டது. இதனால் தமிழக முதல்வர் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார்.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000 அபராதம் – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!!

மதிப்பீடு :

தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தாலும், மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காக 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி புத்தகங்களை வழங்கி அதன் மூலம் மாணவர்கள் கற்றல் திறனை சோதிக்க முடிவு செய்தனர். இதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி புத்தகம் வழங்கப்படும் என்று அரசு முன்னரே அறிவித்திருந்தது.

TN Job “FB  Group” Join Now

கல்வி அலுவலர் உத்தரவு:

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான Work Book and Bridge Course புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த புத்தகங்களை பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புத்தகங்களை வழங்கும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்த வேண்டும் என்றும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெரும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here