இனி தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும்.. சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..

0

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் அரசாங்கத்தின் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடிக்கு மேற்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன என்றும், இதற்கென 26 ஆயிரம் நியாய விலை கடைகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

RRB தேர்வு கடைசி நிமிடத்தில் ரத்து…வெளிமாநிலங்களில் தமிழக தேர்வர்கள் பரிதவிப்பு  

அதாவது, “ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது போல் தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக  ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதை போலவே, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று (19-03-2025) முதல் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!