
IPL 2025: CSK vs MI மோதும் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா..?
2025 ஆம் ஆண்டுக்கான IPL போட்டியானது வருகின்ற மார்ச் 22 ம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடரில் பத்து அணிகள் இடையே 74 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டிற்கான கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிக்கொள்ளும் போட்டி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மார்ச் 23 ஆம் தேதி சென்னை – மும்பை மோதும் IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் தங்களது டிக்கெட்களை www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதை தொடர்ந்து, ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை விற்கப்படும் இந்த டிக்கெட்டுகளை வாங்க 2 லட்சம் பேர் ஆன்லைனில் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

























