அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர சூப்பர் சான்ஸ்.. கல்வி இயக்குநரகம் தெரிவித்த முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் மே 8 மற்றும் மே 16 ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது உயர் கல்விக்காக கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கினர். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
TNHRCE ஆணையத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – உடனே விரையுங்கள் || முழு விவரங்களுடன்!
மேலும், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, “மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது”.


























