
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. எந்த மாவட்டத்திற்கு முதலிடம் தெரியுமா..??
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். மேலும், தேர்வு முடிவுகள் நாளை (மே 9) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவாக முடிந்ததால் ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் Legal Officer வேலை – சம்பளம் : ரூ.35,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
அதன்படி “சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (08-09-2025) காலை முடிவுகளை வெளியிட்டார்”. இந்நிலையில் “தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03%) தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அரியலூர் மாவட்டம் 98.82 % தேர்ச்சியுடன் முதலிடம் வகிக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், “www.tnresults.nic.in” என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


























