
” பேருந்துகளில் எகிறிய டிக்கெட் விலை …!! ” ரூ. 4000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி …!! முழு விவரங்கள் உள்ளே…
சென்னையில் வசிக்கும் மக்கள் பண்டிகை கால தொடர் விடுமுறைகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தற்போது, பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை மற்றும் பிற நகரங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையின் முக்கிய சாலைகளில் இரண்டு தினங்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.
அதேபோல், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட் முடிந்துவிடுவதால் பலரும் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஆனால், மக்கள் இந்த அதிக கட்டணத்தை பொருட்படுத்தாமல் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கின்றனர். அந்தவகையில், திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.4,000 வசூல் செய்ப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

























